இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.
ஒன்றாம் முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு, மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்கும் என்றும், அதன் பின்னர் விடுமுறை விடப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு!