ETV Bharat / bharat

உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் - லக்கிம்பூர் கெரி வன்முறை

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உழவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் இறந்ததை அடுத்து பாஜகவுக்கு இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இதனை காட்டுமிராண்டித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்
உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்
author img

By

Published : Oct 4, 2021, 7:18 AM IST

Updated : Oct 4, 2021, 9:02 AM IST

டெல்லி: டிக்கோனியா-பான்பிர்பூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளாண் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் குழு மீது இரண்டு கார்கள் மோதின. இதனால் கோபமடைந்த உழவர்கள் இரண்டு கார்களுக்கும் தீவைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் நான்கு உழவர் உள்ளிட்ட எட்டு பேர் இறந்ததாக லக்கிம்பூர் கெரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் சௌராசியா கூறினார். லக்னோவில் உள்ள அம்மாநில அரசு அலுவலர் ஒருவர், இறந்தவர்களில் நான்கு பேர் வாகனங்களில் பயணம் செய்ததாகக் கூறினார்.

போராட்டத்தின் நடுவே காரை செலுத்திய அமைச்சரின் மகன்

பான்பிர்பூர் பகுதியில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த அம்மாநில துணை முதலமைச்சர் மயூரியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக உழவர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த ஊர் ஒன்றிய உள் துறை இணையமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஜய் குமார் மிஸ்ராவின் சொந்த கிராமம் ஆகும்.

இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற 'காட்டுமிராண்டித்தனம்' உழவர்களின் போராட்டத்தை நிறுத்தாது எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

மேலும் அதில், "உத்தரப் பிரதேசத்திலிருந்து அதிர்ச்சி அளிக்கும் செய்தி! ஒன்றிய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்ட உழவரின் நடுவே காரை வேகமாகச் செலுத்தினார்.

உழவர் மீதான பாஜகவின் வெறுப்பு

இதில் மூவர் இறந்தனர், இதுதான் பாஜக. அவர்கள் நமக்கு உணவு அளிக்கும் உழவரிடம் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களால் உழவரின் போராட்டத்தை தடுத்துவிட முடியாது" என்று கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டிருந்தது.

ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா, இந்தச் சம்பவம் நடந்தபோது தனது மகனோ அல்லது தானோ அந்த இடத்தில் இல்லை என்று கூறியுள்ளார். காருக்கு அடியில் சிக்கி இரண்டு உழவர் இறந்துவிட்டதாக மிஸ்ரா தொலைபேசியில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்
உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தனது கட்சியினர் லக்கிம்பூர் கெரிக்குச் செல்கிறார்கள் என்று கூறினார். மேலும் அவர், "இந்தச் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது பாஜக தலைவர்களின் உழவர் மீதான ஆணவம், வெறுப்புக்கான அதிர்ச்சியான உதாரணம் ஆகும்.

தோட்டாக்களைவிட சக்திவாய்ந்தவை வாக்குகள்

உழவர் தங்களுக்காக அல்ல; இந்தியாவுக்காகவும், உணவுப் பாதுகாப்புக்காகவும் போராடுகிறார்கள். நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். நான்கு உழவரைக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றம்" என்று குற்றஞ்சாட்டினார்.

பாஜகவைக் கடுமையாகச் சாடி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில், "உழவருக்குத் தோட்டாக்கள், கொலையாளிகளுக்கு மாலைகள்! மோடி-யோகியின் அரசு ரத்த தாகம் கொண்ட அரசு. வாக்களிப்பின்போது மக்கள் அவர்களைப் பழிவாங்குவார்கள்.

சில நேரங்களில் ஏழைகளின் வாக்குகள் ஒடுக்குபவர்களின் தோட்டாக்களைவிட சக்திவாய்ந்தவை. உழவரை எதுவும் தடுக்க முடியாது, அவர்கள் போராடுவார்கள், அவர்கள் வெற்றிபெறுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவால் சுதந்திரமாக நடக்க முடியாது - எச்சரிக்கை

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த மனிதாபிமானமற்ற படுகொலையைப் பார்த்த பிறகும் அமைதியாக இருப்போர் ஏற்கனவே இறந்துவிட்டதற்குச் சமானம். ஆனால் இந்தத் தியாகத்தை வீணாக்கவிட மாட்டோம் - கிசான் சத்தியாகிரக ஜிந்தாபாத்!" என அறைகூவல்விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்வீட்டில், "வேளாண் சட்டங்களை அமைதியாக எதிர்க்கும் உழவர் மீதான, பாஜக அரசின் உள் துறை அமைச்சர் மகனின் மனிதாபிமானமற்ற, கொடுமையான செயல் கண்டனத்திற்குரியது.

ஆணவம் கொண்ட பாஜக மக்களை அடக்குவதை உத்தரப் பிரதேசம் இனி பொறுத்துக்கொள்ளாது. இதே நிலை நீடித்தால், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவால் நடக்கவோ, வாகனத்திலிருந்து இறங்கவோ முடியாது" எனக் கடும் எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோயம்பேடு பகுதியில் அதிகரிக்கும் செல்போன் பறிப்புகள்

Last Updated : Oct 4, 2021, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.