திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும், அம்பலபுழா பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் தலவடியில் உள்ள கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்பகுதியில் ஒரு வார காலமாக கனமழை பெய்ததால் கோயிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், மணமக்களால் திருமணத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. திருமணம் நடக்குமா என்ற சந்தேகமும் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், மணமக்கள் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தனர். எப்படியும் கோயிலுக்கு வருவோம் என்று கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பினர்.
சொன்னபடியே கோயிலுக்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். ஆனால், அவர்கள் வந்த முறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது கோயிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் இருந்து மணமக்கள் இருவரும் அண்டாவில் அமர்ந்து மிதந்தபடியே கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அதே அண்டாவில், மணக்கோலத்தில் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: ராஜாராணி நடிகைக்குத் திடீர் திருமணம்?