திருவனந்தபுரம் : அண்மையில் மரணித்த கேரள ஆயுர்வேத மருத்துவர் விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் மாநில அரசின் துணை போக்குவரத்து ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தத் தகவலை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, பெண்களுக்கு எதிராக நடத்தல் மற்றும் சமூக தீங்கு உள்ளிட்ட பாதக செயல்களில் ஈடுபட்டதால் கிரண் குமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
ஆயுர்வேத மருத்தவர் விஸ்மயா ஜூன் 21ஆம் தேதி கொல்லம் சாஸ்தம்கோட்டா பகுதியில் உள்ள அவரது கணவர் கிரண் குமார் வீட்டின் குளியலறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் விஸ்மயா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?