டேஹ்ராடூன் (உத்தரகாண்ட்): உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் சிவாலயத்தின் தேவஸ்தானத்தை கலைக்க வலியுறுத்தி, அக்கோயிலின் முன் அமர்ந்து அர்ச்சகர்கள் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசித்திபெற்ற சிவலாயங்களில் கேதார்நாத் சிவன் ஆலயம் பிரதானமானது. இமயமலை அடிவாரத்தில் பனி வடிவில், காட்சி தரும் லிங்கத்தைத் தரிசிக்க, இங்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் கேதார்நாத் கோயிலின் முன், மாநில தேவஸ்தான வாரியத்தை கலைக்கக்கோரி, அக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஆச்சார்யா சந்தோஷ் திரிவேதி, கடந்த சில தினங்களாக 'சிரசு ஆசனம்' செய்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் இவர் சில நாட்கள் உண்ணாநோன்பு போராட்டத்தையும் மேற்கொண்டிருக்கிறார்.
'தற்போது அமைக்கப்பட்டுள்ள 'சார் தம் தேவஸ்தான வாரியத்தை' கொண்டு வந்ததால், அர்ச்சகர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது. எனவே புதிய தேவஸ்தான வாரியத்தை உடனடியாக கலைக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் இன்னும் தீவிரம் அடையும்' எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு அர்ச்சகர் புரோஹித் சமாஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத், 'விரைவில் சார் தம் தேவஸ்தானம் வாரியம் விரைவில் மறுகட்டமைக்கப்படும்; சீரமைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புரோஹித் சமாஜ், "இருப்பினும், இப்போது மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, வாரியம் விரிவுபடுத்தப்படுகிறது. இது சகித்துக்கொள்ளப்படாது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மதனின் ஆபாச ஆடியோவைக் கேட்டு வெறுப்பான நீதிபதி; தடுமாறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்