இது குறித்து சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2014-15, 2018-19 ஆகிய ஆண்டுகளில் ஆம்புலன்ஸ்கள் 50 விழுக்காடு அவரச நோயாளிகளை சரியான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில்லை.
இதய நோய்கள், சுவாசம், பக்கவாதம் போன்ற வழக்குகளில் 108 சேவைகள், குறிப்பிட்ட கால அவகாசம் 10 நிமிடங்கள் என்றாலும், 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வழக்குகளில் தாமதமாக வந்தன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கு ஓர் உதாரணமாக டிசம்பர் 2, 2017 அன்று அதிகாலை 4.29 மணிக்கு, சித்ரதுர்கா மாவட்டத்திலிருந்து இதய நோய் தொடர்பான ஒரு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து ஆசியன் ஆம்புலன்ஸ் (KA07G402) 56 நிமிடங்கள் கழித்து தாமதமாகச் சென்றது. இதேபோல், ஆம்புலன்ஸ் அனுப்ப தாமதமான பல நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கும், அழைப்புகளை நிவர்த்திசெய்வதற்கும், நோயாளிகளின் வருகையைப் பற்றி மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கும், அவசர மருத்துவச் சேவைகளின் செயல்பாடுகளுக்கும் ஒரு நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) உருவாக்க வேண்டும்” என்று சிஏஜி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் வாடகை வாகனமாக இயக்கம்... வீடியோ ஆதாரத்தால் குழப்பம்!