ஐஐடி(IIT), என்ஐடி(NIT), ஐஐஐடி(IIIT) மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ தேர்வுகள் நடக்கும். மெயின், அட்வான்ஸ்டு என இரு தேர்வுகளை ஜேஇஇ உள்ளடக்கியது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வெழுதலாம்.
இந்தத் தேர்வு முதல்கட்டமாகப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துவருவதால் ஜேஇஇ முதன்மை தேர்வுகள் ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரையிலும், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 8ஆம் தேதிவரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதற்காக Jeemain.nta.nic.in என்னும் இணையதளத்தை அணுக வேண்டும். முன்னதாக இந்தத் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புனேவில் நீட், ஜெஇஇ தேர்வுக்கு இலவச பயிற்சி