ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானின் தக்கி என்ற ஊரில் பிறந்த அறிஞர் கோபி நரங் சந்த் ஒரு இந்திய கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் அறிஞர். மொழி, இலக்கியம், கவிதை மற்றும் கலாச்சார ஆய்வுகள் குறித்த 60 க்கும் மேற்பட்ட அறிவார்ந்த மற்றும் விமர்சன புத்தகங்களை நரங் வெளியிட்டுள்ளார். இவற்றில் பல பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
இலக்கிய வட்டங்களில், இவரின் கருத்துக்கள் மிகுந்த மரியாதையுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உருது கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்த கோபி சந்த் நரங் உருதுவின் தூதர் என்றும் அழைக்கப்பட்டார்.
மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை, இந்தியாவின் மிக முக்கியமான இலக்கிய நிறுவனமான சாகித்திய அகாடமியின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கோபி நரங் சந்த் தன்னுடைய 91 வயதில் அமெரிக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு- காஷ்மீரில் காவல் துறையினர் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல்!