இந்திய - சீனா எல்லைப் பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. இதில் பல மக்கள் சிக்கி வழியிலேயே மாட்டிக்கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்திய -சீனா எல்லைக்கு அருகேயுள்ள நாது லா-காங்டாக் சாலையில் நேற்று (பிப். 18) கடுமையான பனிப்பொழிவு காரணமாக 155 வாகனங்களில் வந்த சுமார் 447 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து அறிந்த இந்திய ராணுவம், அவர்களை மீட்டு பாதுகாப்பான தங்குமிடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; தரைமட்டமான வரலாற்று சின்னங்கள்