லடாக்: பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்திய ராணுவ வீரர்கள் எனது குடும்பம். அவர்களுடன் தீபாவளியை கொண்டாடுவது எனக்கு கிடைத்த பாக்கியம். நாட்டின் படைகளே நமக்கு பாதுகாப்பு தூண். தீபாவளி என்பது பயங்கரவாதத்தின் முடிவு பண்டிகையாகும்.
அதை கார்கில் போர் நமக்கு உறுதிபடுத்தியுள்ளது. இந்த கார்கிலில் நமது படைகள் பயங்கரவாதத்தை நசுக்கியது. இந்தியா ஒருபோதும் போரை முதல் வாய்ப்பாக கருதாது. நம்மை பொறுத்தவரை போர் கடைசி வாய்ப்பு மட்டுமே. உலகின் அமைதி போக்குக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது.
இந்த ஆதரவை வலிமை இல்லாமல் நம்மால் மற்ற நாடுகளுக்கு கொடுக்க முடியாது. அந்த வலிமை நமது படைகளில் உள்ளன. 8 ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக முப்படைகளிலும் பெண்களுக்கான இடங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அவர்களின் வருகை நமது வலிமையை மேலும் அதிகரிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அற்புதமான தீபாவளியை கொண்டாடுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி