இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 943 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (செப். 9) மட்டும் 260 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 42 ஆயிரத்து ஒன்பது நபர்களாக அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 681 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக இதுவரை மூன்று கோடியே 23 லட்சத்து 42 ஆயிரத்து 299 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 72 கோடியே 37 லட்சத்து 84 ஆயிரத்து 586 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாகக் கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 196 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.