நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 796 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நிலவரம்
நாட்டில் இதுவரை, மூன்று கோடியே ஐந்து லட்சத்து 85 ஆயிரத்து 229 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு லட்சத்து 82 ஆயிரத்து 71 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 723 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து இரண்டாயிரத்து 728ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (ஜூலை.04) வரை நாடு முழுவதும் 41 கோடியே 97 லட்சத்து 77 ஆயிரத்து 457 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 15 லட்சத்து 22 ஆயிரத்து 504 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கடந்த 24 மணிநேரத்தில் 14 லட்சத்து 81 ஆயிரத்து 583 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 35 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 46 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவிலும் பாடம்