சூரத்: குஜராத் மாநிலம், சூரத் அடுத்த அம்ரோலி பகுதியைச் சேர்ந்தவர், கணேஷ் ஷவாய். ஒடிசாவைச் சேர்ந்த கணேஷ், தன் இரு மகன்களுடன் சூரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். கணேஷ் ஷவாயின் மூத்த மகன் முகாபதிர் வைர தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் ஷங்கர் சற்று மனநிலை குன்றியவர் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, வீட்டின் அறையில் உள்ள விளக்கை அணைத்தது தொடர்பாக கணேஷ் ஷவாயின் மற்றும் மூத்த மகன் முகாபதிர் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்த நிலையில் கீழே கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் முகாபதிர் பலமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் கணேஷ் நிலை குலைந்து தரையில் விழுந்துள்ளார். ஆத்திரம் குறையாத முகாபதிர் கீழே கிடந்த துடுப்பு போன்ற ஆயுதத்தை கொண்டு தந்தையை பலமுறையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயெ ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த போலீசார் கணேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிந்து முகாபதிரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 மணி நேரப்பயணத்திற்குப் பின் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் விரக்தி!