ETV Bharat / bharat

சதர் திருவிழாவில் பங்கேற்கும் ரூ.26 கோடி மதிப்புள்ள 'லவ் ராணா' காளை! - ராணா காளை

சதர் திருவிழாவிற்கு ஹைதராபாத் நகரம் தயாராகி வருகிறது. இந்த முறை திருவிழாவின் ஈர்ப்பாக ரூ. 26 கோடி மதிப்புள்ள 'லவ் ராணா' காளை இருக்கும் என்று கூறப்படுகிறது.

sadar festival rana buffalo
sadar festival rana buffalo
author img

By

Published : Nov 13, 2020, 12:08 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): மாநிலத்தில் நடைபெறும் சதர் திருவிழாவில் 'லவ் ராணா’ காளை சிறப்பு அங்கீகாரத்தைப் பெறும் என்று கூறப்படுகிறது.

தெலங்கானாவின் கலாசார மரபுகளை அடையாளப்படுத்தும் சதர் கொண்டாட்டங்களுக்கு 'ஹைதராபாத்' தயாராகி வருகிறது. நகரத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்று இது. நவம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் இத்திருவிழாவின் சிறப்பு ஈர்ப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 'லவ் ராணா' காளை இருக்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓதுவது ஒழியேல்; வாசிப்பை ஊக்குவிக்கும் சுவரோவியங்கள்!

ஹைதராபாத்தின் கைரட்டாபாத்தைச் சேர்ந்த மதுயாதவ் என்பவர், பல்வேறு பந்தயங்களில் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த 'சுல்தான் ராஜூ துன்னா' என்ற காளையின் கன்றுக்குட்டியை ஒரு ஆண்டிற்கு முன்பு வாங்கி, தனது பண்ணையில் சேர்த்துள்ளார். கைரட்டாபாத், நாராயணகுடாவில் நடைபெறும் சதர் கொண்டாட்டங்களில் 'லவ் ராணா' காளை ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த காளை ஒவ்வொரு நாள் காலையிலும் 10 லிட்டர் பால், மாலை 10 லிட்டர் பால் தவிர, உலர்ந்த பழங்கள், ஆப்பிள்களை உண்பதாகவும்; தினமும் இதற்காக ரூ.10ஆயிரம் வரை செலவிடுவதாகவும் இதன் உரிமையாளர் மதுயாதவ் தெரிவித்துள்ளார்.

ரூ.26 கோடி மதிப்புள்ள காளை

மேலும், பல்வேறு பந்தயங்களில் வென்ற 'சுல்தான் ராஜூ துன்னா' காளை வாரத்திற்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஜானி வாக்கர் மதுபானத்தைக் குடிப்பதாகத் தெரிவித்தார். சிறந்த தரமான பந்தய இனத்தைச் சேர்ந்ததும், சுல்தான் ராஜூ துன்னாவின் வழித்தோன்றலுமாகத் திகழும் 'லவ் ராணா’ காளையை, சுமார் ரூ.26 கோடி வரை பலர் விலைபேசியும், மதுயாதவ் தர மறுத்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.