ETV Bharat / bharat

சங்கரதாஸ் சுவாமி நினைவு தினம்... ஆட்டம் போட்ட விஜய் ஆண்டனி - Sankaradas Swamigal celebrated in Puducherry

'நாடகத்தந்தை' என போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 100 ஆவது நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதனிடையே படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற நடிகர் விஜய் ஆண்டனி கலைஞர்களின் ஊர்வலத்தில் பங்கேற்று சாலையில் கூத்து கலைஞர்களுடன் நடனம் ஆடினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 14, 2022, 6:50 AM IST

புதுச்சேரி: பல வடிவங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ள இந்த சினிமாவின் கருப்புள்ளி நாடக வடிவம் ஆகும். இவை இலக்கியங்களைக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை இந்த நாடகக் கலை பெற்றதற்கு பல காரணங்கள் இருப்பினும், அவைகள் அநேக நேரங்களில் சாமனியவர்களுக்கானதாகவும் அவர்களுள் ஒருவர் குறித்து எடுக்கப்பட்டதாக இருந்ததே இவற்றின் வெற்றிக்கு இன்றியமையாதா காரணிகளாக அவ்வப்போது இருந்தன.

அந்த வகையில், தமிழில் இயல், இசை, நாடகம் என்ற முக்கலைகளின் வளர்ச்சியே தமிழின் அழியாப் புகழுக்கு வலுவாய் அமைந்தன. இதில், நாடகக் கலையின் வளர்ச்சிக்கு தொண்டற்றியவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர், சங்கரதாஸ் சுவாமிகள்.

தூத்துக்குடி அருகே காட்டுநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் தாமோதர கணக்கப் பிள்ளை-பேச்சியம்மாள் தம்பதிக்கு 1867-ல் செப்.7-ல் மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே பழனியில் தண்டபாணி சுவாமிகளிடம் சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள் உள்ளிட்டவற்றை கற்றதோடு சந்தம், வண்ணம் என்பன போன்ற இசைப்பாடல்களைப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் இவர்.

கல்யாண ராமர், ராமுடு ஐயர் ஆகியோர் நாடகசபையில் இணைந்து எமன், சனீஸ்வரர், இராவணன், இரணியன் உள்ளிட்ட எதிர்மறையான கதாபத்திரங்களில் அறிமுகமாகி நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சாமி நாயுடு என்பவரது நாடகசபையில் சிலகாலம் ஆசிரியராகவும் இருந்தார்.

புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100 வது நினைவு தினம் அனுசரிப்பு

1910-ல் சமசர சன்மார்க்க நாடக சபை-யைத் தொடங்கி, பாலர் நாடகசபையை வளர்த்தார். நாடகக் கலையை அழியாமல் பேணி வளர்த்த இவர், 1922-ல் பக்கவாதத்தால் நவ.13 புதுச்சேரியில் காலமானார்.

ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவு நாளில் தமிழ் திரைப்பட கலைஞர்கள், நாடக கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம் அந்த வகையில் நேற்று அவரது 99 வது நினைவு நாளில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இதனையொட்டி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பறை இசை கலைஞர்கள், பாரம்பரியக்கலைக்குழுவினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பல கலைஞர்கள் தெருக்களில் கூத்தாடியும், பல்வேறு இசைக்கருவிகளை வாசித்தும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு பெருமை சேர்த்தவாறு அவரது சமாதியில் மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த ஊர்வலத்தின் போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஜய் ஆண்டனி கலைஞர்களின் ஊர்வலத்தில் பங்கேற்று சாலையில் கூத்து கலைஞர்களுடன் நடனம் ஆடினார்.

இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் நிதியுதவி தேவை - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.