மேஷம்
இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும். நீங்கள் மிகச் சரியாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுவீர்கள். எனினும் முன்னேற்றம் சிறிது மந்தநிலையிலேயே இருக்கும். மனம் தளர வேண்டாம். உங்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு.
ரிஷபம்
இன்று உங்கள், தொழிலில் முன்னேற்றம் இருக்கிறது. இந்த முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. நிதித் தொடர்பான வாய்ப்புகளும் வெற்றிகளும் உங்களை வந்து சேரும். பொருள் ஆதாயமும் இருக்கும்.
மிதுனம்
இன்று உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு உரையாடுவீர்கள். உங்களது நிதி நிலைமை குறித்து உங்கள் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க இது சரியான நேரமாகும். இதனால் உங்களது மனபாரம் குறையும். நீங்கள் புத்துணர்ச்சியுடன், அனைத்தையும் உற்சாகமாக அணுகுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும்.
கடகம்
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகள் உடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கை துணைக்கான வருங்காலத் திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். உங்களுக்கு கிடைத்துள்ள துணையை உன்னை நினைத்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்
வானிலை மாற்றம்போல உங்கள் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் சோகமாகவும் இருக்கும். எனினும் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். உங்களது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும்.
கன்னி
நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு உங்களால் இருக்க முடியாது. உங்களது உடல் நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்கவழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.
துலாம்
இன்றும் நீங்கள் காதல்வயப்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, நீங்கள் சந்திக்கும் காதலரை வரவேற்கத் தயாராக இருங்கள். எனினும் இந்தக் காதலுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
விருச்சிகம்
மனத்திலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்கவும். நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களுடன் திறமையாகப் பணியாற்றி, அவர்களுக்குப் பணிகளைச் சிறந்த முறையில் பங்கிட்டு வழங்குவீர்கள். அவர்களது திறன்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் பணிகளை ஒதுக்குவீர்கள்.
தனுசு
இன்று நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். எனினும், மாலையில் கவலை மேகங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். உங்களது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும். வெளி நாடு அல்லது நண்பர்களிடமிருந்து வரும் நல்ல செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மகரம்
நீங்கள், இன்று நியாயமான, அநியாயமான முறையில் குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்றதாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளைத் திறமையாக எடுப்பீர்கள்.
கும்பம்
எதிர்பாராத ஒரு நிகழ்வு இன்று ஏற்படலாம். வெற்றி, பணம், காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராதவகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடக்கூடும். அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.
மீனம்
அலுவலகம், வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும் பணிகளையும் கையாளுவீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழு மனத்துடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.
இதையும் படிங்க: பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிட்டு திருவிழா!