இதுகுறித்து ஜான் யாங் மேலும் கூறுகையில், "மூன்றில் இரண்டு பங்கு ஆசிய அமெரிக்கர்கள் குடிபெயர்ந்தவர்கள். அவர்களில் 52 விழுக்காட்டினருக்கு குறைந்த ஆங்கில அறிவே உள்ளது (Limited English Proficiency). இவர்கள் முக்கியமாக சீன, டகலாக் (Tagalog), வியட்நாம், கொரிய, இந்தி மொழிகளை பேசுகின்றனர்" என்றார்.
இதில் சீனாவிலிருந்து குடியேறிய 66 விழுக்காட்டினருக்கு குறைந்த ஆங்கில அறிவு உள்ளது. அதேபோல பிலிப்பைன்ஸில் இருந்துவந்த 35 விழுக்காட்டினர், வியட்நாமிலிருந்து வந்த 72 விழுக்காட்டினர், கொரியாவிலிருந்து வந்த 64 விழுக்காட்டினர், இந்தியாவிலிருந்து வந்த 29 விழுக்காட்டினருக்கு குறைந்த ஆங்கில அறிவு உள்ளது.
குறைந்த ஆங்கில அறிவு உள்ள குடியேறியவர்களிலும், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல் உள்ளது எனவும் ஜான் யாங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறப்பு அந்தஸ்து ரத்தாகி 2 ஆண்டுகள் நிறைவு... எப்படி இருக்கிறது காஷ்மீர்?