ETV Bharat / bharat

ஹிமாச்சல், உத்தரகாண்டில் வெளுத்து வாங்கும் கனமழை... 25 பேர் உயிரிழப்பு - JHARKHAND HEAVY RAINFALL

தொடர்ந்து பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மொத்தம் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தரகாண்டில் வெளுத்து வாங்கும் கனமழை
உத்தரகாண்டில் வெளுத்து வாங்கும் கனமழை
author img

By

Published : Aug 21, 2022, 7:25 AM IST

சிம்லா: நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசங்களிலும், கிழக்கு பகுதிகளில் உள்ள சமவெளிகளிலும் இந்தாண்டு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால், ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, வீடுகள் இடிந்து விழுவது ஆகியவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி, காங்க்ரா, சம்பா ஆகிய பகுதிகளில், கனமழை, நிலச்சரிவு காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்க்ராவில் உள்ள சக்கி பாலம் கனமழையால் நேற்று (ஆக. 20) உடைந்தது. இதனால், பதான்கோட், ஜோகிந்தர்நகர் இடையேயான ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், நேற்று தொடர்ந்து ஏற்பட்ட மேகவெடிப்பால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. வீடுகளின் உள்ளே மண் மற்றும் வெள்ளம் புகுந்ததால் பல்வேறு கிராமங்களில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்டின் பவுரி மாவட்டத்தில் அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அங்கு பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.

கனமழை நாட்டின் கிழக்கு பகுதிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. ஒடிசாவின் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இதுவரை 500 கிராமங்களில் இருந்து 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழையால், ஒடிசாவில் நான்கு பேரும், அதன் அருகாமை மாநிலமான ஜார்க்கண்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒடிசாவில், நேற்று முன்தினம் (ஆக. 19) இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொருள்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், புவனேஸ்வர் நகரின் பல சந்தைகளில் காய்கறிகளின் விலை கடுமையான ஏற்றத்தை கண்டுள்ளது.

ஜார்க்கண்டில் அதிக காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. மேலும், மின்சார கம்பங்கள் சேதமடைவது, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கிறது. தொடர்ந்து, மேற்கு மத்திய பிரதேச பகுதிகளில் இன்றும் (ஆக. 21), கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளில் நாளையும் (ஆக. 22) மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை அருகே நேற்று முன்தினம் மாலை (ஆக.19) மேகவெடிப்பு காரணமாக பெருமழை கொட்டியது. நள்ளிரவு வரை நீடித்த கனமழையால் அங்குள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோயில் வளாகத்திற்குள் காட்டாறு போல வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மலையில் உள்ள பக்தர்கள் கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அங்கு நீர் வடிந்ததால் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக பக்தர்களுக்கான ரோப் கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடிந்தது வெள்ளம் - மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.