ETV Bharat / bharat

2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.97 லட்சம் கோடி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 10:11 AM IST

Updated : Jan 2, 2024, 10:54 AM IST

GST collection 2023: 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்த ஜிஎஸ்டி தொகையாக ரூ.14.97 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12% அதிகம் ஆகும்.

GST collection to Rose Rs 1 crore and 64 lakh in FY 2023 2024
2023 2024 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல்

டெல்லி: 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி (GST) தொகை விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று (ஜன.1) வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.1.64 லட்சம் கோடியாகும்.

அதில், சிஜிஎஸ்டி (CGST) மூலம் ரூ.30,443 கோடியும், எஸ்ஜிஎஸ்டி (SGST) மூலம் ரூ.37,935 கோடியும், ஐஜிஎஸ்டி (IGST) மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.

  • 👉 Posting a growth rate of 12% Y-o-Y, ₹14.97 lakh crore gross #GST collection during April-December 2023 period⁰⁰👉 Gross #GST collection averages ₹1.66 lakh crore in first 9 months of FY24⁰⁰👉 ₹1,64,882 crore gross #GST revenue collection for December, 2023

    Read more ➡️… pic.twitter.com/obNCxO50nZ

    — Ministry of Finance (@FinMinIndia) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

👉 Posting a growth rate of 12% Y-o-Y, ₹14.97 lakh crore gross #GST collection during April-December 2023 period⁰⁰👉 Gross #GST collection averages ₹1.66 lakh crore in first 9 months of FY24⁰⁰👉 ₹1,64,882 crore gross #GST revenue collection for December, 2023

Read more ➡️… pic.twitter.com/obNCxO50nZ

— Ministry of Finance (@FinMinIndia) January 1, 2024

மேலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.14.97 லட்சம் கோடி ஆகும். அதாவது கடந்த ஆண்டை விட 12% கூடுதலாக கிடைத்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.13.40 லட்சம் கோடி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது.

2023 டிசம்பர் மாதத்தில் மாநிலங்கள் வாரியாக வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகைகள் குறித்த சில விபரங்கள் பின்வருமாறு:-

  • ரூ.26,814 கோடி - மகாராஷ்டிரா
  • ரூ.11,759 கோடி - கர்நாடகா
  • ரூ.9,888 கோடி - தமிழ்நாடு
  • ரூ.9,874 கோடி - குஜராத்
  • ரூ.8,130 கோடி - ஹரியானா
  • ரூ.8,011 கோடி - உத்தரப் பிரதேசம்
  • ரூ.5,121 கோடி - டெல்லி
  • ரூ.4,753 கோடி - தெலுங்கானா
  • ரூ.3,545 கோடி - ஆந்திரப் பிரதேசம்
  • ரூ.2,458 கோடி - கேரளா

என நாடு முழுவதும் ரூ.1,64,882 லட்சம் கோடி ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையில் சொகுசு காரில் அதிவேகமாகச் சென்று விபத்து: பாஜக எம்எல்ஏ-வின் மகன் கைது!

டெல்லி: 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி (GST) தொகை விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று (ஜன.1) வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.1.64 லட்சம் கோடியாகும்.

அதில், சிஜிஎஸ்டி (CGST) மூலம் ரூ.30,443 கோடியும், எஸ்ஜிஎஸ்டி (SGST) மூலம் ரூ.37,935 கோடியும், ஐஜிஎஸ்டி (IGST) மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.

  • 👉 Posting a growth rate of 12% Y-o-Y, ₹14.97 lakh crore gross #GST collection during April-December 2023 period⁰⁰👉 Gross #GST collection averages ₹1.66 lakh crore in first 9 months of FY24⁰⁰👉 ₹1,64,882 crore gross #GST revenue collection for December, 2023

    Read more ➡️… pic.twitter.com/obNCxO50nZ

    — Ministry of Finance (@FinMinIndia) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி தொகை ரூ.14.97 லட்சம் கோடி ஆகும். அதாவது கடந்த ஆண்டை விட 12% கூடுதலாக கிடைத்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.13.40 லட்சம் கோடி வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது.

2023 டிசம்பர் மாதத்தில் மாநிலங்கள் வாரியாக வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகைகள் குறித்த சில விபரங்கள் பின்வருமாறு:-

  • ரூ.26,814 கோடி - மகாராஷ்டிரா
  • ரூ.11,759 கோடி - கர்நாடகா
  • ரூ.9,888 கோடி - தமிழ்நாடு
  • ரூ.9,874 கோடி - குஜராத்
  • ரூ.8,130 கோடி - ஹரியானா
  • ரூ.8,011 கோடி - உத்தரப் பிரதேசம்
  • ரூ.5,121 கோடி - டெல்லி
  • ரூ.4,753 கோடி - தெலுங்கானா
  • ரூ.3,545 கோடி - ஆந்திரப் பிரதேசம்
  • ரூ.2,458 கோடி - கேரளா

என நாடு முழுவதும் ரூ.1,64,882 லட்சம் கோடி ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையில் சொகுசு காரில் அதிவேகமாகச் சென்று விபத்து: பாஜக எம்எல்ஏ-வின் மகன் கைது!

Last Updated : Jan 2, 2024, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.