கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள 2019-20 நிதியாண்டில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்ட நிதி குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாராத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள மொத்தம் ரூ.6,309.90 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.592.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பாதிப்பைச் சந்தித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதேவேளை குறைந்தபட்சமாக ரூ.40 லட்சம் ரூபாய் லட்சத்தீவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 849 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகளவில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களைச் சீரழிக்க கங்கணம்கட்டி காத்துக்கொண்டிருக்கும் சீனா!