கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருக்கார்த்திகை திருநாளில் அனைவரின் வாழ்விலும் இன்பம், மகிழ்ச்சி எனும் ஒளி வீசவும் கரோனா எனும் துன்பம் மறையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.