டெல்லி :வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட், தனி நபர் பயன்பாடுகளுக்கான (பெர்சனல்) கணினி உள்ளிட்ட கேட்ஜெட்ஸ்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக கட்டுப்பாடு இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், தனிநபர் பயன்படுத்தும் கணினிகள், டேப்லெட்டுகள், அதீத செயல்திறன் கொண்ட சிறிய வடிவிலான கணினிகள், கணினி இயக்கத்திற்கான சர்வர்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தரப்படுத்துதல், மதிப்பீடு, பழுதுபார்ப்பது மற்றும் திரும்பப் பெறுவது அல்லது கொடுப்பது, உள்ளிட்ட 20 பணிகளுக்கு இறக்குமதி உரிமத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக கட்டுப்பாட்டு இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை தடுத்து நிறுத்தவே இந்த இறக்குமதி தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள பொருட்களுக்கு அரசின் அனுமதி அல்லது உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வெளிநாட்டு பயணிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு இந்த இறக்குமதி தடை பொருந்தாதும் என்றும் அதேநேரம் அவர்களுக்கான சுங்கவரித்துறையின் பேக்கேஜ் எனப்படும் நிர்ணயிக்கபட்ட எடை வரம்பு விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லேப்டாப், டேப்லெட், பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது அல்ட்ரா ஸ்மால் பார்ம் பேக்டர் கம்ப்யூட்டர் போன்றவற்றை அமேசான், பிலிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இருந்து, வாங்குவதற்கு இறக்குமதி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பழைய இறக்குமதி கொள்கையில் அடிப்படையில் இந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்யவதை தடுத்து நிறுத்தவம், தனி நபர் தகவல்கள் இதன் மூலம் திருடப்படுவதை கட்டுப்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!