ETV Bharat / bharat

புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் கீழே சென்ற கார் - நல்வாய்ப்பாக மோதாமல் தப்பித்தது! - விமானம் கார் மோதல் தவிர்ப்பு

புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானம் மீது கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் கார் ஒன்று மோதுவதுபோல சென்றதால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது. கார் விமானத்தின் கீழே சென்றாலும் நல்வாய்ப்பாக மோதவில்லை.

Go First
Go First
author img

By

Published : Aug 2, 2022, 3:16 PM IST

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று, டாக்காவுக்கு புறப்படத்தயாராக இருந்தது. அப்போது கோ ஃபர்ஸ்ட் (Go First) விமான நிறுவனத்திற்குச்சொந்தமான கார் எதிர்பாராத விதமாக விமானத்தின்கீழே சென்றது. சரியான நேரத்தில் ஓட்டுநர் காரை நிறுத்தியதால், நல்வாய்ப்பாக கார் விமானத்தின் மீது மோதாமல் தப்பித்தது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் பிறகு இண்டிகோ விமானம் புறப்பட்டுச்சென்றது. மேலும் கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா? என்று சோதனை நடத்தப்பட்டதில், அவர் மது குடிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாக விமானப்போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை... மொத்த பாதிப்பு 6ஆக உயர்வு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.