டெல்லி: காதலர் தினம் நாளை(பிப்.14) கொண்டாடப்படவுள்ளது. ஏராளமான காதல் ஜோடிகளும், ஒருதலைக் காதலர்களும் தங்களது அன்புக்குரியவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், காதலர் தின டேட்டிங்கிற்கு சிறப்பாக தயாராவதற்கான சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை பார்க்கலாம்...
பொருத்தமான ஆடை: காதலர் தினத்தில் உங்களது இணையரை இம்ப்ரஸ் செய்வதற்காக அழகாக உடை உடுத்தும்படி பலரும் அறிவுரை கொடுப்பார்கள். ஆனால், கண்ணை கவரும்படி உடை உடுத்துவதை விட, நமக்கு செளகரியமாகவும், தன்னம்பிக்கை ஏற்படும் வகையிலும் உடை உடுத்துவது சிறந்தது. நடக்க, உட்கார, நடனமாட என அனைத்திற்கும் வசதியாக இருக்கும் வகையிலான ஆடையை தேர்வு செய்யுங்கள்.
ஆண்கள் ஃபிட்டான கேசுவல் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். அதேபோல் பெண்கள் தங்களுக்கு செளகரியமாக இருக்கும் வகையிலான கேசுவல் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். பெண்கள் கருப்பு அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வு செய்தால், அது காதலர் தின இரவில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும்.
வாசனை திரவியம்: காதலர் தின டேட்டிங்கில் உங்கள் இணையை கவர்ந்திழுக்கும் வகையில் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தலாம். பல மணி நேரத்திற்கு நீடித்திருக்கும் வகையிலான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துங்கள். இந்த வாசனை உங்களையும் சிறப்பாக உணர வைக்கும். இந்த வாசனை திரவியங்களை கழுத்து, மணிக்கட்டு, காதுகளின் பின்புறம் உள்ளிட்ட பல்ஸ் பாயின்ட்களில் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் வாசனைத் திரவியங்களை அதிகளவுக்கு பயன்படுத்தக்கூடாது.
காலணிகள்: காலணிகளைப் பொறுத்தவரை ஏராளமான ஸ்டைலிஷ் ஆப்ஷன்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உங்களது ஆடைக்கு ஏற்றார்போல் காலணிகளை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் செளகரியமாக இருக்கும் காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில ஆண்களுக்கு ஷூ பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம். அதேபோல் சில பெண்களுக்கு ஹை ஹீல்ஸ் அணிவது கடினமாக இருக்கும். அதனால் பயன்படுத்த எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும் காலணிகளைப் பயன்படுத்தலாம். பெண்கள் ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.
மேக்கப்: மேக்கப்பை பொறுத்தவரையில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது, அனைவரும் மேக்கப் செய்யலாம். பார்ப்பதற்கு இயல்பாகவும், தன்னம்பிக்கை தரும் வகையிலும் மேக்கப் அணிவது நல்லது. ஆண்கள் பிபி/சிசி கிரீமை பயன்படுத்தலாம். பெண்கள் போல்டான நிறங்களில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். இமைகள், கன்னங்களில் கலர்புல் ஷேட்களை பயன்படுத்தலாம்.
ஆபரணங்கள்: உடைக்கு ஏற்ற வகையில் சட்டிலான ஆபரணங்களைப் பயன்படுத்தலாம். கண்ணைப் பறிக்கும் வகையிலாக ஆபரணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிளாஸியான வாட்ச், பேக் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Valentines Week 2023: முத்தங்களுக்கும் மொழிகள் உண்டு!