கோவிட்-19 லாக்டவுன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (மார்ச்-ஜூன்) நாட்டின் ஜி.டி.பி. வரலாறு காணாத வகையில் மைனஸ் 23.9 விழுக்காடு சுருங்கியது.
இந்நிலையில், இரண்டாவது காலாண்டிற்கான ஜி.டி.பி. விவரத்தை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்தாண்டை ஒப்பிடும்போது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி. மைனஸ் 7.5 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் நெகட்டிவ் வளர்ச்சியை சந்திப்பதால் இந்தியா பொருளாதாரம் மந்த நிலையில் (Recession) உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, கடந்த காலாண்டில் மிக மோசமான வீழ்ச்சியிலிருந்த ஜி.டி.பி., லாக்டவுன் தளர்வுக்குப்பின் சற்று மீட்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக வேளாண்துறை, உற்பத்தி துறை, மின்சாரத்துறை உள்ளிட்டவை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: மீண்டும் களைகட்டிய மாருதி சுஸூகி விற்பனை!