ETV Bharat / bharat

டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி! - பார்த்தோ தாஸ்குப்தா

மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்க் மாஜி சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Jan 17, 2021, 11:30 AM IST

தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக, ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட மூன்று சேனல்கள் மீது புகார் எழுந்தது.

டிஆர்பி முறைகேடு ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், டிஆர்பியில் முறைகேடு நடைபெறுவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பார்த்தோ தாஸ் குப்தா பிணை வேண்டி தாக்கல் செய்த மனுவை மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனிடையே டிஆர்பி ரேட்டிங் மோசடி வழக்கில் மும்பை காவல் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பார்த்தோ தாஸ் குப்தா, அர்னாப் கோஸ்வாமி இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பார்த்தோ தாஸ் குப்தாவுக்கு நேற்று (ஜன. 17) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை காவல் துறையினர் மும்பை ஜெஜெ மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இதில், அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...டிஆர்பி முறைகேட்டில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர்தான் - மும்பை நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.