உடுப்பி: பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சரும், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான கே.எஸ்., ஈஸ்வரப்பா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 34 (குற்ற கூட்டு நோக்கம்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாட மாநிலத்தில் அரசு ஒப்பந்ததாரராக இருந்தவர் சந்தோஷ் பாட்டீல். இவர் தனது தற்கொலை கடிதத்தில், கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது குற்றஞ்சாட்டியிருந்தார். அதாவது, ஊராட்சி பில்களை கிளீயர் செய்ய 40 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக கூறியிருந்தார். இது கர்நாடக மாநில அரசியலில் புயலை கிளப்பியிருக்கும் நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான கே.எஸ்., ஈஸ்வரப்பா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 34 (குற்ற கூட்டு நோக்கம்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையை காவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, கே.எஸ்., ஈஸ்வரப்பா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 34 மற்றும் 306 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தனது தற்கொலை கடிதத்தில் தனது சாவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாவும் மற்றொருவரும் நேரடிப் பொறுப்பு எனக் கூறியிருந்தார். சந்தோஷ் பாட்டீலின் மொபைல் போன், லேப்-டாப் ஆகியவற்றையும் கைப்பற்றி காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை முறைப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈஸ்வரப்பாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்த ராமையா வலியுறுத்தியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கர்நாடக கான்ட்ராக்டர் தற்கொலை; உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரும் காங்கிரஸ்!