டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இரண்டு பக்கங்கள் மீதமிருந்த நிலையில் நிர்மலா சீதாராமன் சுருக்கமாக முடித்தார்.
அல்வா வழங்கும் நிகழ்வு
இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக அல்வா வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பட்ஜெட் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய ஊழியர்களுக்கு அல்வாவிற்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
இதையடுத்து நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதியாண்டில் 8 முதல் 8.5 விழுக்காடக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டின் வளர்ச்சி
2022-23ஆம் ஆண்டின் வளர்ச்சியானது தடுப்பூசி செலுத்துதல், விற்பனையில் சீர்திருத்தங்களை கொண்டுவருதல், கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல், மூலதனத்தை அதிகரித்தல் உள்ளிட்ட நிதி ஆதார முன்னேற்பாடுகள் மூலம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறயுள்ளன. இதனால் வாக்காளர்களை கவரும் விதமாக அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க :Economic Survey 2021-22: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு ஆக உயரும்!