உத்தரபிரதேசம்: ஹமிர்பூரில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முன்னாள் இராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும் கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் வரதட்சணையாக தனது மகளுக்கு புல்டோசர் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்த வித்தியாசமான செயல் குறித்து மகளின் தந்தை பரசுராம், தனது மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதை விட வேறு எதாவது பயனுள்ளதாக வழங்க வேண்டும் என எண்ணினேன். மேலும் எனது மகள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறாள். அந்த தேர்வில் தோல்வியுற்றால் இந்த புல்டோசர் அவளது வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.
தற்செயலாக, உ.பி.யில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் குறியீடாக புல்டோசர் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையாக வீடுகளை இடிக்க புல்டோசரை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட் உடன் பிடிபட்ட நைஜீரியர்கள்!