ETV Bharat / bharat

நான்காவது நாளாக மகாபாதயாத்திரை - விவசாயிகள், பெண்கள் பங்கேற்பு

ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதியை தக்கவைக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் 'மகாபாதயாத்திரை' நான்காவது நாளை எட்டியுள்ளது.

மகாபாதயாத்திரை
மகாபாதயாத்திரை
author img

By

Published : Nov 5, 2021, 7:06 AM IST

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியைத் தொடரக் கோரி விவசாயிகள் 'மகாபாதயாத்திரை' என்னும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த மகாபாதயாத்திரை அமராவதி கூட்டு நடவடிக்கைக் குழுவின் (JAC) தலைமையில் நடத்தப்பட்டது.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அருகே தொடங்கிய 'மகாபாதயாத்திரையைத் அடுத்த 45 நாள்களுக்கு தினமும் 10-15 கி.மீ. குண்டூர், பிரகாசம், நெல்லூர், சித்தூர் மாவட்டங்களிலுள்ள 70 கிராமங்களைச் சுற்றி வரும். இந்தப் பயணம் டிசம்பர் 17ஆம் தேதி திருப்பதியில் நிறைவடைகிறது.

நான்காவது நாளாக நடந்த இந்த நடைபயணத்தில் ஏராளமான விவசாயிகள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி, பேரணிக்கு சென்றவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன் விவசாயிகள், பெண்கள் பிரார்த்தனை செய்தனர். ஒய்.எஸ்.ஆர்.சி.பி தவிர அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாதயாத்திரைக்கு ஆதரவளித்தனர்.

2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, அமராவதியை சட்டப்பேரவைத் தலைநகராகத் தக்க வைத்துக் கொண்டு, நிர்வாகத் தலைநகரை விசாகப்பட்டினத்திற்கும், நீதித்துறை தலைநகரை கர்னூலுக்கும் மாற்ற ஒய்எஸ்ஆர்சிபி அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி: மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.