ETV Bharat / bharat

இந்தியாவில் இனி எத்தனாலுக்கு அதிக முக்கியத்துவம் - பிரதமர் மோடி

இந்தியாவில் மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இனி எத்தனாலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Jun 5, 2021, 11:00 PM IST

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (மே 5) அனுசரிக்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது, "உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் எத்தனால் தயாரிப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. இந்தியாவில் 21ஆம் நூற்றாண்டில் பிராதன முக்கியத்துவத்தை எத்தனால் பெற்றுள்ளது. 2025க்குள் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு என்ற இலக்கை இந்தியா எட்டும்.

மாற்று எரிசக்தி பயன்பாட்டில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குள் ஏழு விமான நிலையங்களில் மட்டுமே சூரிய மின்சக்தி வசதி இருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.