டெல்லி : மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை ஒன்றை அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கினர். இதன் மதிப்பு ரூ.65 கோடியே 75 லட்சம் ஆகும்.
அஜித் பவார் சம்பந்தப்பட்ட இந்த ஆலை மீது பண மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து இங்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.
அதன் பின்னர் இந்த ஆலை முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் வெளியான அறிக்கையில், “இந்த சொத்துக்கள் குரு கமாடிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் உள்ளன. ஜரண்டேஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இது மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் சுனேத்ரா அஜித் பவார் ஆகியோருடன் தொடர்புடைய நிறுவனம் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கடன்களும் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது!