ETV Bharat / bharat

ரூ.8 செலவில் 30 கி.மீ செல்லும் பைக்.. அசாம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - அறிவியல் செய்திகள்

Tezpur boy builts e-bike: ரூபாய் 8 செலவில் 30 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய இ-பைக் ஒன்றினை அசாம் மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த இ-பைக் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

e bike made by a Tezpur student can travel 30 kilometers at a cost of 8 rupees
அசாம் மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 5:09 PM IST

Updated : Dec 8, 2023, 5:20 PM IST

தேஜ்பூர் (அசாம்): அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் பகுதியின் பரிகாசுரி வட்டத்தைச் சேர்ந்த மஸ்குல் கான் என்ற மாணவர் உருவாக்கியுள்ள இ-பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மாணவர் உருவாக்கியுள்ள இ-பைக் மூலம் வெறும் 8 ரூபாய் செலவில் 30 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்பது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாக உள்ளது.

மாணவர் இந்த இ-பைக்கை சாலையில் ஓட்டிச் செல்லும் போது அனைவரும் வியப்புடன் பார்ப்பதால் இந்த இ-பைக்கிற்கு WONDER BIKE 250 என மாணவர் பெயரிட்டுள்ளார். கரோனா தொற்று காலத்தில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் போது மாணவர் மஸ்குல் கால் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் பெற்ற அனுபவத்தின் மூலம் தற்போது இந்த இ-பைக்கை மஸ்குல் கான் உருவாக்கியுள்ளார்.

எதிர்காலத்தில் இ-கார் ஒன்றினை உருவாக்கும் திட்டம் உள்ளதாகக் கூறும் மஸ்குல் கான், தனது தந்தை தனக்கு அளிக்கும் ஊக்கமே தன்னை அடுத்து இயங்க உந்துசக்தியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மஸ்குல் கான் உருவாகியுள்ள இந்த இ-பைக் 30 கிலோ எடை கொண்டது. மேலும், 80 முதல் 100 கிலோ வரையிலான எடையினை தாக்கக் கூடிய சக்தி கொண்டதாக உள்ளது.

இந்த இ-பைக்கில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. தற்போது மாணவர் மஸ்குல் கானின் படைப்பினை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை!

Last Updated : Dec 8, 2023, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.