அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பலரும் கண்டனக் குரல் எழுப்பிவரும் நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அறங்காவல் குழுவை கலைக்க வேண்டும்
பொது நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "1990ஆம் ஆண்டிலேய நாட்டு மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.140 கோடி நிதியளித்துள்ளனர். ஆனால், தற்போது ராமர் கோயிலைக் கட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ.2.5 கோடிக்கு அறங்காவல் குழு வாங்கியுள்ளது.
அறங்காவல் குழுவை அரசு உடனடியாகக் கலைக்கவேண்டும். நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு அதிக நன்மதிப்புள்ளதாக ஊடகங்களில் போலியாக கருத்துப் பரப்பபடுகிறது.
இதுபோன்ற சர்வேக்கள் பணம் கொடுத்து நடத்தப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வு : 'வரி வசூலில் பிஹெச்டி' என ராகுல் நையாண்டி!