ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி முகாம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- தமிழிசை சௌந்தர்ராஜன்

கரோனா தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்
author img

By

Published : Oct 25, 2021, 6:25 PM IST

புதுச்சேரி: மாநிலத்தில் 100% கரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் முயற்சியாக சுகாதாரத்துறை ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று(அக்.25) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 91% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிள்ளையார்குப்பம், நல்லவாடு ஆகிய இரண்டு கிராமங்களும் 100% போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியை தாண்டி விட்டோம் இது மிகப்பெரிய வரலாற்று சாதனை. அனைவரின் கூட்டு முயற்சியால் ஒரு ஜனநாயக நாடால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்து இருக்கிறோம். பாரதப் பிரதமரும் பாராட்டியுள்ளார். எனவே புதுச்சேரியும் இந்த வரலாற்றை படைக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தடுப்பூசி திட்டம் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே இவ்வளவு பெரிய தடுப்பூசி திட்டம் விரைவாக வழங்கப்பட்டது இந்தியாவில் தான்.

விமானங்களில் வெளி நாடுகளுக்கு போகும்போதும் கரோனா தடுப்பூசி ஆவணம் கேட்கிறார்கள், எதிர்காலத்தில் இன்னும் பல இடங்களில் சான்றிதழ் கேட்கப்படலாம். ஆகவே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரை நூறு கோடி பேர் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை. எனவே தயக்கம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேசிய விருது வென்ற ‘அசுரன்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.