கோவிட்-19 இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் விதமாக, தலைநகர் டெல்லியில் 500 ஐசியூ படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை டெல்லி ராம் லீலா மைதானத்தில் அமைக்கப்படுகிறது.
அதேப்போல் புராரி மைதானத்தில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேஜ் பகதூர், ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனைகளை நேரில் சென்று பார்வையிட்டப் பின் இந்த அறிவிப்பை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டார்.
டெல்லியில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்படும் நிலையில், கடந்த நான்கு நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எனது மகள், எனது பெருமை" மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி ட்வீட்டின் காரணம்?