ETV Bharat / bharat

தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - மதுபோதையில் நடந்ததா..? - பிஎம்டபிள்யூ சைக்கிளோட்டி மீது மோதியது

டெல்லி சாலையில் தாறுமாறாக ஓடிய பி.எம்.டபிள்யூ. கார், சைக்கிள் மீது மோதிய விபத்தில் சைக்கிளை ஓட்டி சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சொகுசு கார் விபத்து
சொகுசு கார் விபத்து
author img

By

Published : Nov 28, 2022, 8:06 AM IST

டெல்லி: அரியானா, குருகிராமை சேர்ந்தவர் சுவெந்து சேட்டர்ஜி. டெல்லி - குருகிராம் விரைவுச் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதே சாலையில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார், சுவெந்து சேட்டர்ஜி சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில், சுவெந்து சேட்டர்ஜி சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சொகுசு கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

சொகுசு கார் நம்பர் பிளேட்டில் வி.ஐ.பி. நம்பர் அச்சடிக்கப்பட்டு இருந்ததாலும், கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவலை போலீசார் வெளியிடாததாலும் மது போதையில் வி.ஐ.பி. யாரேனும் விபத்து ஏற்படுத்தினார்களா என சமூக வலைதளத்தில் பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் காரில் பாதுகாப்பு அமைச்சகத்தின் டெல்லி கன்டோன்மென்ட் வாரிய நிதிக் குழுத் தலைவர் என ஸ்டிக்கெர் ஒட்டப்பட்டு இருந்ததால் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. சொகுசு காரின் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவின.

இதுகுறித்து விளக்கமளித்த போலீசார், காரின் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும், ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உள்நோயாளிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.