மேஷம்
இன்றைய நாள், பிரச்சினைகள் மிகுந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில், உங்கள் நண்பர்களின் கருத்துக்கு நீங்கள் ஒத்துப்போகவில்லை என்றாலும், அவருடன் இருப்பது உங்களுக்குப் பிடிக்கும். நெடுநாள்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகள் நிறைவுபெற வாய்ப்புள்ளன. எனவே, நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களுக்குச் சிறந்த நாளாக இருக்காது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், உங்களால் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தவிர்க்க இயலாது. கடினமான, சிக்கலான பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். எளிமையான பணியில் கவனம் செலுத்துங்கள். இதுவும் கடந்துபோகும் என்பதால் அமைதியாக, நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பது நல்லது.
மிதுனம்
இன்று, நீங்கள் எந்தக் குறிக்கோளை நோக்கிச் செல்கிறீர்கள் என்பதில் உங்களுக்குத் தெளிவு இருப்பதால், குறிக்கோளை அடைய இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குதூகலம், உற்சாகம் அதிகம் இருப்பதால், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் உழைப்பிற்கு எதிர்பாராதவிதமாகப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால், உங்களது முயற்சி பலனளிக்காமல் இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு அல்லது சச்சரவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. பக்கத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பழகவும். சூழ்நிலைகளைப் புன்னகையுடன் எதிர்கொள்ளவும்.
சிம்மம்
இன்றைய நாளில், அனைவரையும் அனுசரித்து ஒத்துழைப்புடன் பணியாற்றவும். உங்களது இனிய மனப்பான்மையின் காரணமாக, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். உங்களைப் போன்ற ஒத்த மனநிலை கொண்டவர்களையும் நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி
உங்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நேரம் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது முக்கியம். பணியிடத்தில், மூத்த அலுவலர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடித்து, கடினமான சூழ்நிலைகளைக் கையாளவும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும்.
துலாம்
இன்றைய நாளில், பணியிடத்தில் நீங்கள் உங்களது செயல்திறன், ஆற்றலை வெளிப்படுத்தி மக்களைக் கவருவீர்கள். கலை, கலைநயமிக்க பொருள்கள் மீது, உங்களுக்கு உள்ளார்ந்த ஆர்வம் இருக்கும். இன்று நீங்கள் புதிய கலைநயமிக்க பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
விருச்சிகம்
இன்று, பணியிடத்தில் ஏற்படும் வேலை தொடர்பான நெருக்குதல்களைச் சமாளிக்கும் திறமை உங்களுக்கு இருக்கும். உங்களது வேலைப் பளுவின் காரணமாக உங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இன்றைய நாளின் முடிவில் யோகா, தியானம், இசையை ரசித்தல் போன்றவற்றின் மூலம் அமைதியை நாடலாம்.
தனுசு
இன்றைய நாளைப் பொறுத்தவரை, சச்சரவுகளும் எதிர்பார்ப்புகளும் அடங்கிய நாளாக இருக்கும். உங்கள் மீது தங்களது கருத்துகளைத் திணிக்க விரும்பும் நபர்களிடமிருந்து சிறிது விலகி இருக்கவும். பிறர் கூறும் கருத்துகளைப் பொறுமையாகக் கேட்டு, அதனை ஏற்றுக் கொண்டால், சுமுகமான வகையில் சச்சரவுகளைத் தீர்க்கலாம்.
மகரம்
இன்று பொதுவாக, வேலைப்பளு அதிகம் இருக்கும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொண்டால் நல்லது. இதன்மூலம் வேலைப்பளு குறையும். பணியை மேற்கொள்ளும்போது, எச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்பட்டால், பணியில் ஏற்படும் தவறுகளைத் தவிர்க்கலாம்.
கும்பம்
உலகம் முழுவதிலுமிருந்து, நல்ல விஷயங்கள் ஏதோ ஒன்று உங்களை வந்தடையும். இன்று முழுவதும் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் நண்பர்கள், மனதுக்குப் பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
உங்களது பணியைப் பொறுத்தவரை, கிரகநிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கவும். படிப்பதற்காக வெளியில் செல்ல விரும்புவர்களுக்கு, அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் கனவுகளை நோக்கிச் செல்வார்கள்.
இதையும் படிங்க: நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. அவசரமாக கூடிய பஞ்சாப் அமைச்சரவை!