ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Dec 2, 2021, 9:14 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 715 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 715 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 715 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 715 நபர்களுக்கு இன்று (டிச.02) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 என உயர்ந்துள்ளது.

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை டிசம்பர் 02ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 569 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 711 நபர்களுக்கும், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும் என 715 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 35 லட்சத்து 39 ஆயிரத்து 828 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் 27 லட்சத்து 28 ஆயிரத்து 350 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானார்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,115 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 748 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 83 ஆயிரத்து 691 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகளும் என 12 நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 504 என உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக சென்னையில் 123 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 121 நபர்களுக்கும், ஈரோட்டில் 65 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 58 நபர்களுக்கும் அதிக அளவில் வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு:

சென்னை மாவட்டம் - 5,58,260

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,50,420

செங்கல்பட்டு மாவட்டம் - 1,73,901

திருவள்ளூர் மாவட்டம் - 1,20,258

ஈரோடு மாவட்டம் - 1,06,440

சேலம் மாவட்டம் - 1,01,437

திருப்பூர் மாவட்டம் - 97,284

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 78,480

மதுரை மாவட்டம் - 75,529

காஞ்சிபுரம் மாவட்டம் - 75,638

தஞ்சாவூர் மாவட்டம் - 76,128

கடலூர் மாவட்டம் - 64,410

கன்னியாகுமரி மாவட்டம் - 62,798

தூத்துக்குடி மாவட்டம் - 56,499

திருவண்ணாமலை மாவட்டம் - 55,197

நாமக்கல் மாவட்டம் - 53,582

வேலூர் மாவட்டம் - 50,223

திருநெல்வேலி மாவட்டம் - 49,665

விருதுநகர் மாவட்டம் - 46,401

விழுப்புரம் மாவட்டம் - 46,025

தேனி மாவட்டம் - 43,607

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,567

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,860

திருவாரூர் மாவட்டம் - 41,878

திண்டுக்கல் மாவட்டம் - 33,244

நீலகிரி மாவட்டம் - 34,121

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,564

புதுக்கோட்டை மாவட்டம் - 30,334

திருப்பத்தூர் மாவட்டம் - 29,396

தென்காசி மாவட்டம் - 27,394

தர்மபுரி மாவட்டம் - 28,828

கரூர் மாவட்டம் - 24,645

மயிலாடுதுறை மாவட்டம் - 23,378

ராமநாதபுரம் மாவட்டம் - 20,634

நாகப்பட்டினம் மாவட்டம் - 21,345

சிவகங்கை மாவட்டம் - 20,403

அரியலூர் மாவட்டம் - 16,927

பெரம்பலூர் மாவட்டம் - 12,106

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,031

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:அதிகரித்து வரும் ஒமைக்ரான்: நம் மன நலனை பேணிக் காக்க சில எளிய வழிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.