நாட்டின் மிக மோசமான கோவிட்-19 பாதிப்பை சந்தித்துவரும் மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய பிரதமர் மோடி, ”இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் கோவிட்-19 பாதிப்பு பரவிவருகிறது.
இந்தச் சூழலில் நாம் ஒன்றிணைந்து பரவலை தடுப்து அவசியம். பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற புகார்கள் வருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு என்ற உணர்வுடன் செயல்பட்டால் இதுபோன்ற தட்டுப்பாடுகள் நிலவாது.
மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பல மருத்துவமனைகளில் விபத்துகள் ஏற்பட்டுவரும் நிலையில், அதன் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த இரண்டாம் அலையை வெற்றிகரமாக வீழ்த்த முடியும்” என்றார்.
இதையும் படிங்க: மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு, பாதி எரிந்த உடல்கள்- ம.பி.யின் அவலநிலை!