நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 170 என கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆறு நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89ஆக உள்ளது. அதேபோல், தற்போது 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
புதிதாக ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 530ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து எட்டாயிரத்து 582ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில் மாநிலங்களவை ஊழியர்கள்!