இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 91 ஆயிரத்து 702 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823ஆக உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று (ஜுன் 10) ஒரேநாளில் 16 ஆயிரத்து 813 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட அதிகமாகும். அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு, 12 ஆயிரத்து 207 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று (ஜுன் 10) மட்டும் 3,403 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 79 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டு கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73 ஆக உள்ளது. தற்போது 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
இதுவரை, மொத்தம் 24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 649 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.