மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய 19 வயதான இளைஞரை, கைதுசெய்து சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் காவல் துறையினர் அடைத்தனர்.
கரோனா பரவல் அதிகரித்துவருவதால், அறிகுறிகள் உள்ள கைதிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், அந்நபருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், சதாரா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 5) அதிகாலை 5 மணியளவில், கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் கைதி மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, குற்றவாளியைப் பிடிக்க இரண்டு தனிப்படைகளைக் காவல் துறையினர் அமைத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 1,03,558 பேருக்கு கரோனா, 478 பேர் உயிரிழப்பு