1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் அவை நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டது. இந்த நாளை நினைவுகூரும் விதமாக நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன நாளாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 2015 முதல் ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய மக்கள் இந்த நாளை மிகுந்த மதிப்புடன் போற்றிவருகின்றனர்.
இந்த நாளில் நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த முன்னோடிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் கனவை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்" எனத் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அரசு உயர் அலுவலர்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக மீண்டுள்ளது: சக்திகாந்த தாஸ்