ETV Bharat / bharat

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை போல் முடிவுகள் இருக்காது, காங்கிரஸ் நம்பிக்கை - குஜராத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

குஜராத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அதளபாதாளத்திற்கு சென்றபோதும், கணிக்கப்பட்டது போல் முடிவுகள் மோசமாக இருக்காது என்று காங்கிரஸ் நம்புவதாக ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் அமித் அக்னிஹோத்ரி எழுதுகிறார்.

Congress puts up brave face as exit polls paint grim picture for party

author img

By

Published : Dec 6, 2022, 6:20 PM IST

ஹைதராபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடந்தது. மொத்தமாக 89 தொகுதிகளில் 63.3 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதில் 58.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன. குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கலாம் என்று கணிப்புகள் வெளியாகின. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 149 தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 35 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் வெளியாகின.

இருப்பினும், காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை போல் முடிவுகள் மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் உள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் குமார் கூறுகையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அவ்வளவு மோசமாக இல்லை. தேர்தல் கருத்துக் கணிப்புகள் தவறாக போகலாம். நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் கருத்துகணிப்புகளுக்கு எதிராக இருந்துள்ளன. குஜராத்தில் பல மாதங்களாகவே காங்கிரஸ் மிகச் சிறப்பான பரப்புரையை செய்துவந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும், பாஜகவின் ஆட்சி என்ன செய்தது என்பதையும் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விளக்கினோம். பாஜகவின் சாதனைகள் பரப்புரையில் எப்போதும் கிடையாது, பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்களின் ஊர்வலத்திலேயே உள்ளது.

இந்த தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மை கிடையாது. டிசம்பர் 8ஆம் தேதி முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார். குஜராத்தில் 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே கணிக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதனடிப்படையில் குஜராத் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நம்பிக்கை அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, காங்கிரஸ் குறைந்தபட்சம் 60 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கணிப்புகள் சௌராஷ்டிராவில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலும், தெற்கு குஜராத்தில் 22 தொகுதிகளிலும், வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் தலா 15 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. குஜராத் தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் உள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என்று கருதி கடந்த சில மாதங்களாகவே குஜராத் மாநிலம் முழுவதும் தேர்தல் வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் பயன்படுத்தினோம்.

இந்த நிர்வாகிகள் அளித்த கணிப்புகளுக்கும், செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளுக்கும் மிகப்பெறும் வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் கட்சி மீது எதிர்மறையான எண்ணங்கள் உள்ளது உண்மையே. இது உட்கட்சிப் பூசல், எம்எல்ஏக்களின் கட்சி தாவலால் ஏற்பட்டது. இந்த காரணிகள் மட்டுமே மிகப்பெரும் பின்னடைவுக்கான காரணமாக அமைந்துவிடாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய எம்எல்ஏக்களுக்கு பதிலாக அந்த தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்பே நிறுத்தப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

குஜராத் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. இதனால் பின்னடைவு ஏற்படும் என்று மூத்த தலைவர்களிடையே வருத்தம் உள்ளது. இருப்பினும், பாஜக பாரம்பரியமாக வலுவாக இருக்கும் நகரங்களில் பாஜகவின் பரப்புரையோ, வேட்பாளர்களோ வாக்கு வங்கியை கவரக்கூடிய வகையில் இல்லை என்றும் பழங்குடியின வாக்குகள் பாஜகவுக்கு செல்வது சந்தேகமே என்றும் காங்கிரஸ் நினைக்கிறது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் நம்புகிறது. ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் அமித் அக்னிஹோத்ரி.

இதையும் படிங்க: முழு விவரம்: குஜராத், ஹிமாச்சலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.