நமச்சிவாயம் பாஜகவில் இணைந்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ஆதரவாளர்கள் - புதுச்சேரி செய்திகள்
அண்மையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம் பாஜகவில் இணைந்ததை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் இன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி நமச்சிவாயத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, வில்லியனுர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும், அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்.
இவர்கள், இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லி புறப்பட்டனர். இன்று ஜே.பி. நட்டா முன்னிலையில், இவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இதனை, அவர்களது ஆதரவாளர்கள் புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதையும் படிங்க: 'பிப்ரவரி இறுதியில் மீண்டும் ராகுல்காந்தி தமிழ்நாடு வர வாய்ப்பு'- கே.எஸ். அழகிரி