டெல்லி : மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்தும், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜூலை 11ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 30க்கும் மேற்பட்டவர்களை ஒன்று திரண்டி ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்தார். மராட்டிய துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவரது அணியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
மகாரஷ்டிர அரசியலில் எதிர்க்கட்சிகள் வரிசையில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மகாராஷ்டிராவிற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே. பாடீல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய எச்.கே பாடீல், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சியை குறிவைத்து தாக்கப்படுவது கவலை அளிப்பதாக கூறினார். முன்னதாக சிவசேனாவை உடைக்கும் முயற்சியில் பாஜக தவறான முடிவை எடுத்தது, தற்போது அதே தவறை தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் மீண்டும் செய்கிறது என்றார்.
சிவ சேனாவை குறிவைத்து அதன் எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்ததனால் மக்கள் உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கின்றனர். அதேபோல், தேசியவாத காங்கிரிஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் சிலரை அஜித் பவார் அழைத்துச் சென்றதனால் மக்கள் சரத் பவாரை ஆதரிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுபோன்ற நிர்ப்பந்த அரசியலை மக்கள் விரும்புவது இல்லை. உத்தவ் தாக்ரே மற்றும் சரத் பவார் ஆகிய இருவருக்கும் மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். கர்நாடகாவில் செய்தது போல் மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க செய்து வறுகிறது இறுதியில் வருந்தும் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் சிவ சேனாவின் உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஷ் அகாடி உள்பட காங்கிரஸின் எதிர்கால திட்டங்கள் குறித்து மூத்த உறுப்பினர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஜூலை 11ஆம் தேதி விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருட்டு பயம்... பவுன்சர்களை பணியமர்த்தி தக்காளி விற்பனை...Thug life வியாபாரி!