டெல்லி: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலன்சார்ந்த 25 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
குறிப்பாக நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் எட்டு வழிச்சாலை திட்டம், புதிய வேளாண் சட்டங்களைக் கைவிடக்கோரியும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இதையடுத்து மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தொடர்ந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மு.க. ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதையும் படிங்க: டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்!