பாட்னா: ’பிகார் மரம் பாதுகாப்பு தினம்’ எனும் நிகழ்ச்சியில் பிகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று (ஆக 11) கலந்துகொண்டார். அதில் மரத்திற்கு ராக்கி கட்டிய நிதிஷ் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எல்லோரும் தங்கைகளைப் பாதுகாக்கும் விதமாக இந்த ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
ஆனால் அத்துடன் சேர்த்து நாம் நம் மரங்களையும் பாதுகாக்க வேண்டும்” என்றார். நீங்கள் பிரதமர் வேட்பாளராகலாம் என அனைவரும் பேசிக் கொள்கின்றனரே என செய்தியாளர்கள் கேட்டக் கேள்விக்கு “நாம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. நான் அனைவருக்காகவும் வேலை செய்ய வேண்டுமென நினைக்கிறேன்” என்றார்.
மேலும், சிபிஐ போன்ற துறைகளைத் தவறாக பயன்படுத்தினால் மக்களின் கோவத்திற்கு ஆளாக நேரிடும் என்றார். இதனையடுத்து, ’சிபிஐ’ உங்களைத் தாக்குமென அஞ்சுகுறீர்களா எனக் கேட்டதற்கு, “ எனக்கு அப்படி ஒன்றும் பயம் இல்லை. அப்படி நடந்தாலும் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. என்னை எதிர்த்து பேசினால் கட்சியில் சிலருக்கு லாபம் கிடைக்கிறது. அப்படி என்னைப் பேசுவதன் மூலம் அவர்களுக்கு லாபம் கிடைத்தால் பேசட்டுமே, அதில் எனக்கு மகிழ்ச்சி தான்” என்றார்.
இதையும் படிங்க: EVM பயன்பாட்டை அனுமதித்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி