புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு கடந்த மாதம் கலைந்ததையடுத்து முதலமைச்சர் பதவியை நாராயணசாமி ராஜினாமாசெய்தார். இதனால் புதுச்சேரியில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இருப்பினும் முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு கருதி நாராயணசாமிக்கு வழங்கப்பட்ட காவல் பாதுகாப்புத் தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், நாராயணசாமிக்குப் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்த ஆய்வாளர் கணேசன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், காவல் துணைக் கண்காணிப்பாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஆகியோரைத் தலைமைத் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின்படி பணியிடமாற்றம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
ஆய்வாளர் கணேசன் சிக்மா செக்யூரிட்டி, சைபர் கிரைம் கூடுதல் பொறுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் நாராயணசாமி வீட்டிற்கு ஐஆர்பிஎன் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.